/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பத்திரம் அடகு வைத்து மோசடி இருவருக்கு 3 ஆண்டு சிறை பத்திரம் அடகு வைத்து மோசடி இருவருக்கு 3 ஆண்டு சிறை
பத்திரம் அடகு வைத்து மோசடி இருவருக்கு 3 ஆண்டு சிறை
பத்திரம் அடகு வைத்து மோசடி இருவருக்கு 3 ஆண்டு சிறை
பத்திரம் அடகு வைத்து மோசடி இருவருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : செப் 14, 2025 02:49 AM
சென்னை:சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜரின் மனோகர், 43. இவர் ஏற்றுமதி - இறக்குமதி வியாபாராம் செய்து வருகிறார். 2013ம் ஆண்டு இவருக்கு அறிமுகமான வெங்கட்ராமானுஜம் சங்கரன், அவரது மனைவி சர்மிளா மற்றும் சுதிர்குட்டன் ஆகிய மூவரும், வியாபார தேவைக்காக ஜரின் மனோகரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். வாங்கிய கடனுக்கு ஈடாக, சர்மிளாவிற்கு சொந்தமான நிலத்தின் பத்திரத்தை கொடுத்து ள்ளனர்.
இதற்கிடையே ஜரின் மனோகருக்கு தெரியாமலேயே சொத்து பத்திரத்தை எடுத்து, அசோக் நகரில் உள்ள தனியார் வங்கியில், 49 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளனர்.
இதையறிந்த அவர், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், வெங்கட்ராமானுஜம் சங்கரன், சர்மிளா ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை 23வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் வெங்கட்ராமானுஜம் சங்கரன், சர்மிளா ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதை யடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மற்றொரு குற்றவாளியான சுதிர்குட்டன் என்பவர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால், அவர் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவர் மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது.