/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெருமாள் கோவிலில் 17ல் வைகாசி பெருவிழா பெருமாள் கோவிலில் 17ல் வைகாசி பெருவிழா
பெருமாள் கோவிலில் 17ல் வைகாசி பெருவிழா
பெருமாள் கோவிலில் 17ல் வைகாசி பெருவிழா
பெருமாள் கோவிலில் 17ல் வைகாசி பெருவிழா
ADDED : மே 12, 2025 12:33 AM
வில்லிவாக்கம், :வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பெருவிழாவை ஒட்டி, பிரம்மோத்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு வைகாசி பெருவிழா, இம்மாதம், 17ல் துவங்க உள்ளது.
முதல் நாளில் மாலை, 6:00 மணிக்கு, செல்வ பல்லக்கு உத்சவம், 18ல் அங்குரார்ப்பணம் கேடயம், 19ல் காலை துவஜா ரோஹணம் கேடயம் உத்சவமும், மாலை சிம்ம வாகனம் உத்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 28ம் தேதி வரை, காலையும் மாலையும், பிரம்மோத்சவம் நடக்கவுள்ளன.