ADDED : மே 12, 2025 01:05 AM

சென்னை:சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், 12 முதல் 13 வயதுடைய பள்ளி மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் கோடைக்கால கைப்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டிற்கான பயிற்சி முகாம், கடந்த ஏப்., 28ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில், 55 இளம் வீரர்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாம் நிறைவு நாளில், சர்வதேச கைப்பந்து வீராங்கனை மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பயிற்சி பெற்ற இளம் வீரர்களுக்கு சான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.