/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நீர் உறிஞ்சு பூங்கா பணிகள் சித்தாலப்பாக்கத்தில் துவக்கம் நீர் உறிஞ்சு பூங்கா பணிகள் சித்தாலப்பாக்கத்தில் துவக்கம்
நீர் உறிஞ்சு பூங்கா பணிகள் சித்தாலப்பாக்கத்தில் துவக்கம்
நீர் உறிஞ்சு பூங்கா பணிகள் சித்தாலப்பாக்கத்தில் துவக்கம்
நீர் உறிஞ்சு பூங்கா பணிகள் சித்தாலப்பாக்கத்தில் துவக்கம்
ADDED : செப் 25, 2025 12:58 AM

சித்தாலப்பாக்கம்,;பரங்கிமலை ஒன்றியம், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், நீர் உறிஞ்சு பூங்கா பணிகளை, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்.
இப்பணிகளை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், சி.எம்.டி.ஏ., நிதியில், 0.81 ஏக்கர் பரப்பளவில், 5.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், 204 மீட்டர் நீளத்தில் சுற்றுச்சுவர், 22 ச.மீட்டரில் நீர் சேமிக்கும் வட்ட அமைப்பு, 13 ச.மீட்டரில் ஓய்வறை, 3.8 ச.மீட்டரில் முதலுதவி மற்றும் பாலுாட்டும் அறை, 1,163 ச.மீட்டர் நடைபாதை மற்றும் 32 இருக்கைகள் அமையவுள்ளன.
இதன் சி றப்பம்சமாக, மழைநீரை சேகரிக்கும் வகையில் நீர் உறிஞ்சு அமைப்பு, பூங்கா ஓரங்களில் சிறு குழிகள் வெட்டி, அதில் நீர் ஈர்க்கும் சல்லடை வைத்து, அதன் மீது கூழாங்கற்கள் நிரப்பி அமைக்கப்படும். அவை அனைத்தும், நடுவில் அமைக்கப்படும் நீர் சேமிக்கும் வட்ட அமைப்புடன் குழாய்கள் வாயிலாக இணைக்கப்படும். இதனால், பூங்காவில் சேகரமாகும் மழைநீர் வீணாக வெளியேறாமல் சேகரிக்கப்பட்டு, நி லத்தடி நீர் காக்கப்படும்.
இந்நிகழ்வில், ஒன்றிய செயலர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியன், தலைவர், துணைத்தலைவர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.