Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/திருவொற்றியூர் அ.தி.மு.க., சார்பில் 1,571 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவொற்றியூர் அ.தி.மு.க., சார்பில் 1,571 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவொற்றியூர் அ.தி.மு.க., சார்பில் 1,571 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவொற்றியூர் அ.தி.மு.க., சார்பில் 1,571 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ADDED : மே 13, 2025 12:35 AM


Google News
திருவொற்றியூர் :அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, 71வது பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலர் குப்பன் ஏற்பாட்டில், வடிவுடையம்மனுக்கு பாலாபிஷேகம், 1,571 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, திருவொற்றியூர் தேரடியில் நடந்தது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் வைகைசெல்வன், சின்னையா, மாவட்ட செயலர் மூர்த்தி, இளைஞர் - இளம்பெண்கள் பாசறை மாநில துணை செயலர் சுபா மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

அதன்படி, தள்ளுவண்டி, செயற்கை கால், தெருவோர வியாபாரிகளுக்கு குடைகள், இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரம், வேட்டி - சேலை மற்றும் உணவு உட்பட, 1,571 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலர் குப்பன் பேசியதாவது:

ஏற்கனவே இருக்கும் பட்டாவை, 'ஆன்லைன்' வாயிலாக புதுப்பித்து, அதை வழங்குவதற்காக துணை முதல்வர் உதயநிதி வருகிறார். புதிய பட்டா ஏதும் தரப்படவில்லை. 'டாஸ்மாக்3 ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களில் திளைத்துள்ள ஸ்டாலின், உதயநிதி திகார் சிறைக்கு செல்வர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட தி.மு.க., கவுன்சிலர் பேச்சை கேட்டு, அதிகாரிகள் ஆட்டம் போடுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் தக்க பாடம் புகட்டப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us