Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முகத்துவாரத்தில் வெள்ளநீர் அளவை கணக்கிடாதது ஏன்? அரசுக்கு நீர்வளத்துறை விளக்கம்

 முகத்துவாரத்தில் வெள்ளநீர் அளவை கணக்கிடாதது ஏன்? அரசுக்கு நீர்வளத்துறை விளக்கம்

 முகத்துவாரத்தில் வெள்ளநீர் அளவை கணக்கிடாதது ஏன்? அரசுக்கு நீர்வளத்துறை விளக்கம்

 முகத்துவாரத்தில் வெள்ளநீர் அளவை கணக்கிடாதது ஏன்? அரசுக்கு நீர்வளத்துறை விளக்கம்

ADDED : டிச 05, 2025 06:49 AM


Google News
சென்னை: அடையாறு ஆற்றின் வெள்ளநீரை முகத்துவாரத்தில் கணக்கிட முடியாததற்கான காரணங்களை, அரசுக்கு நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே உற்பத்தியாகும் அடையாறு ஆறு, சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே, வங்க கடலில் கலக்கிறது.

முகத்துவா ரத்தில் வெள்ளநீரை கணக்கிட நீர்வளத்துறை வாயிலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து நம் நாளிதழில் 1ம்தேதி செய்தி வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, நீர்வளத்துறையிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு, கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள விளக்கம்:

அடையாறு ஆற்றில் அதிகப்படியான வெள்ளநீர் செல்லும்போது, அதன் அளவை, அளவுகோலை வைத்து கணிக்கிடுவது என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை.

எனவே, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உதவியுடன், அதிநவீன ஆப்டிக்கல் சென்சார்களை திரு.வி.க., பாலம் மற்றும் கோட்டூர்புரம் பாலம் மற்றும் நான்கு மேற்புற பாலங்களில் அமைத்து, அதிநவீன கணக்கீட்டு முறைப்படி அளவிடப்படுகிறது.

கொந்தளிப்பான நீரோட்டம், அலை காரணமாக ஏற்படும் பின் நீரோட்டம், மணல் படிமங்களின் மாற்றங்கள், கருவிகள் வைப்பதில் சிரமம், அதிக அலையின்போது நீரோட்டம் தலைகீழாக மாறுதல் ஆகிய காரணங்களால், முகத்துவாரத்தில் வெள்ளநீரின் அளவை துல்லியமாக கணக்கிட அளவுகோல் ஏதும் அமைக்க இயலவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us