Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிரபல யு - டியூபர் மீது மனைவி பரபரப்பு புகார்

பிரபல யு - டியூபர் மீது மனைவி பரபரப்பு புகார்

பிரபல யு - டியூபர் மீது மனைவி பரபரப்பு புகார்

பிரபல யு - டியூபர் மீது மனைவி பரபரப்பு புகார்

ADDED : ஜூன் 21, 2025 12:11 AM


Google News
சென்னை, கோவையைச் சேர்ந்தவர் ஸ்ரீ விஷ்ணுகுமார், 32; யு - டியூபர். இவரது மனைவி அஷ்மிதா, 33. இவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

அதன் விபரம்:

ஸ்ரீ விஷ்ணுகுமாரும் நானும் 2017ல் காதல் திருமணம் செய்து, வளசரவாக்கத்தில் வசித்து வந்தோம். அப்போது கணவரின் தாய், பங்கு சந்தையில் முதலீடு செய்யும் தொழில் செய்வது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவர் என்னை தாக்கினார். இதுகுறித்து வடபழனி போலீசில் 2019ல் புகார் அளித்தேன். பின் சமாதானமாக சென்றுவிட்டோம்.

கணவர், மது போதைக்கு அடிமையாகி மீண்டும் என்னை தாக்கியதால், 2022ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று, தனியாக வசித்தேன்.

தான் திருந்திவிட்டதாகவும், என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவர் கூறியதை அடுத்து, 2023ல் விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். எனினும் அவரிடம் மாற்றம் இல்லாததால், தனித்தனியாக வசித்து வந்தோம்.

இந்நிலையில் விஷ்ணுகுமார், என் தொழில் குறித்தும் என்னை பற்றியும் அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல், என்னை மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று, விஷ்ணுகுமாரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us