ADDED : பிப் 12, 2024 02:21 AM
காரப்பாக்கம்:சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் கிராமம் சர்வே எண்: 99/4ல் 17 சென்ட் அரசு இடம் உள்ளது.
இதில், 50 ஆண்டுகளுக்கு முன், பள்ளிக்கூடம் இருந்தது. அப்போது, கூத்து, நாடகம் உள்ளிட்ட திருவிழா கால நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
காலிமனையாக உள்ள இந்த இடம், ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. விரிவாக்க பகுதியான சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன.
அந்தந்த துறைகள், சொந்த கட்டடம் கட்ட தயாராக இருந்தும், இடம் கிடைக்காமல் உள்ளது. இந்த, 17 சென்ட் இடத்தை மீட்டு, அரசு சார்ந்த கட்டடங்கள் கட்ட வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.