/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது
நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது
நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது
நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது
ADDED : மே 13, 2025 12:28 AM
சென்னை :சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் நீலிமா, 38. இவர், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு தினங்களுக்கு முன், இவர் சுய நினைவை இழந்துள்ளார். அப்போது, அவரது ஒரு சவரன் தாலி செயின் திருட்டு போனது.
இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர்.
இதில், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த அன்னபாரதி, 50, என்பவர், அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ள, தன் உறவினரை பார்க்கச் வந்தபோது, நீலிமாவின் தாலி செயினை திருடியது தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்து, செயினை மீட்டனர்.