ADDED : பிப் 11, 2024 12:27 AM
பல்லாவரம், பல்லாவரத்தில், நேற்று முன்தினம், தண்டவாளம் அருகே பெண் சடலம் கிடந்தது.
விசாரணையில், பொழிச்சலுாரைச் சேர்ந்த மகாலட்சுமி, 40, என்பதும், மொபைல் போனில் பேசியபடி, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.