/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரிதான ரத்த நாள நோயால் பாதித்த பெண்ணிற்கு எம்.சி.எம்.,மில் மறுவாழ்வு அரிதான ரத்த நாள நோயால் பாதித்த பெண்ணிற்கு எம்.சி.எம்.,மில் மறுவாழ்வு
அரிதான ரத்த நாள நோயால் பாதித்த பெண்ணிற்கு எம்.சி.எம்.,மில் மறுவாழ்வு
அரிதான ரத்த நாள நோயால் பாதித்த பெண்ணிற்கு எம்.சி.எம்.,மில் மறுவாழ்வு
அரிதான ரத்த நாள நோயால் பாதித்த பெண்ணிற்கு எம்.சி.எம்.,மில் மறுவாழ்வு
ADDED : செப் 17, 2025 01:04 AM
சென்னை, அதீத கால் எலும்பு வளர்ச்சியால், அரிதான ரத்தநாள நோய் பாதிப்புக்கு உள்ளான பெண்ணிற்கு, காலை வெட்டி அகற்றாமல், வடபழனி சிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
மருத்துவமனையின் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் சாய்ராம் சுப்ரமணியன், எலும்பியல் துறை நிபுணர் கலைவாணன் கன்னியன் ஆகியோர் கூறியதாவது:
மிகவும் அரிதான ரத்தநாள நோயால் பாதிக்கப்பட்டு, 48 வயது பெண் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில், அவரது காலில் இயல்புக்கு மாறான எலும்பு வளர்ச்சி இருந்தது. இந்த எலும்பு, முழங்காலுக்கு பின்புறம் உள்ள முக்கிய தமனிக்கு அழுத்தத்தை தந்ததால், ரத்த நாளத்தில் பலுான் போன்ற வீக்கம் இருந்தது.
இதுபோன்ற பாதிப்புகளுக்கு, காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், தொடை எலும்பில் வளர்ந்திருந்த கட்டியை அகற்றி, தொடை நரம்பை பயன்படுத்தி ரத்த ஓட்டத்திற்காக, கெண்டைக்கால் தமனியிலிருந்து, ஒரு மாற்று வழி உருவாக்கப்பட்டது.
இதன் வாயிலாக, கால் அகற்றப்படாமல், மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், நோயாளி நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***