UPDATED : ஜூலை 02, 2026 07:52 PM
ADDED : ஜூலை 02, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
6,504 வீடு புதுப்பிக்க முடிவு ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர், எழில் நகரில், மூன்று திட்டப்பகுதிகளில், 23,704 வீடுகள், 188 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன.
இதில் கண்ணகி நகர் பகுதியில் மொத்தம் உள்ள, 15,656 வீடுகளில், 9,152 வீடுகள், 40 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 6,504 வீடுகளை புதுப்பிக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. எழில்நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில், 2,048 வீடுகளில், 1,152 வீடுகளை புதுப்பிக்கும் பணி விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. - ராஜ்குமார், வீட்டுவசதி துறை அமைச்சர்
