கிணற்றில் விழுந்த இளம்பெண் மீட்பு
கிணற்றில் விழுந்த இளம்பெண் மீட்பு
கிணற்றில் விழுந்த இளம்பெண் மீட்பு
ADDED : செப் 24, 2025 01:06 AM
அம்பத்துார், :அம்பத்துார், சோழபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்த, 26 வயது இளம்பெண், அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில், நேற்று காலை, கால் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, அம்பத்துார் சிறப்பு எஸ்.ஐ., சீனிவாசன், காவலர் மணிகண்டன் இருவரும், சம்பவ இடம் சென்று, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.