/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில நீச்சல் போட்டி 250 மாணவர்கள் பங்கேற்பு மாநில நீச்சல் போட்டி 250 மாணவர்கள் பங்கேற்பு
மாநில நீச்சல் போட்டி 250 மாணவர்கள் பங்கேற்பு
மாநில நீச்சல் போட்டி 250 மாணவர்கள் பங்கேற்பு
மாநில நீச்சல் போட்டி 250 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 30, 2024 01:23 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி திஷா பள்ளியில், ஐ.சி.எஸ்.சி., பள்ளிகள் இடையே மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. பல மாவட்டங்களில் இருந்து, 32 பள்ளிகளைச்சேர்ந்த 250 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
போட்டியானது, 400, 300, 200 மீ., துாரத்தில், பட்டர்பிளை, முன், பின் மற்றும் நேர் நீச்சல் உள்ளிட்ட பிரிவுகளில், மாணவ, மாணவியர் என, தனித்தனியாக நடத்தப்பட்டது.
அதில், 240 புள்ளிகள் பெற்ற துாத்துக்குடி விகாசா பள்ளி, ஒட்டுமொத்தம் சாம்பிபியன் பட்டம் வென்றது. அவர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.