/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதுரை, தேனி, திருச்சி செல்ல 50 கூடுதல் பஸ்கள் மதுரை, தேனி, திருச்சி செல்ல 50 கூடுதல் பஸ்கள்
மதுரை, தேனி, திருச்சி செல்ல 50 கூடுதல் பஸ்கள்
மதுரை, தேனி, திருச்சி செல்ல 50 கூடுதல் பஸ்கள்
மதுரை, தேனி, திருச்சி செல்ல 50 கூடுதல் பஸ்கள்
ADDED : ஜூன் 15, 2024 11:23 PM
கோவை:கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வரும் திங்கட்கிழமை (17ம் தேதி) பக்ரீத் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை; இன்று ஞாயிற்றுக்கிழமை. தொடர்ச்சியாக விடுமுறை வருவதால், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக, அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளது. கோவை மண்டல போக்குவரத்து கழகம் சார்பாக, மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற நகரங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பஸ்களுடன், கூடுதலாக, 50 பஸ்கள் இயக்கப்படும் என, மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.