/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருந்துகள் இல்லாத வாழ்வியல் முறை வழிகாட்டும் அரசு மருத்துவமனை மருந்துகள் இல்லாத வாழ்வியல் முறை வழிகாட்டும் அரசு மருத்துவமனை
மருந்துகள் இல்லாத வாழ்வியல் முறை வழிகாட்டும் அரசு மருத்துவமனை
மருந்துகள் இல்லாத வாழ்வியல் முறை வழிகாட்டும் அரசு மருத்துவமனை
மருந்துகள் இல்லாத வாழ்வியல் முறை வழிகாட்டும் அரசு மருத்துவமனை
ADDED : ஜூலை 01, 2024 02:31 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில், மாணவர்களின் ஆரோக்கியம் மேம்படவும், நினைவாற்றல் வளர்க்கவும் எளிய யோகா பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இன்றைய சூழலில், மக்களின் வாழ்க்கையில் அவ்வபோது இன்னல்கள், மன அழுத்தங்கள், எளிதில் தொற்றிக் கொள்ளும் நோய்கள் வந்து விடுகின்றன. எனவே, இத்தகைய மன அழுத்தங்கங்களை நீக்கவும், நிம்மதியாக வாழவும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில், வாழ்வியல் அடிப்படையில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. மூட்டுவலி, உடல் பருமன், கழுத்து மற்றும் முழங்கால் வலி, ஒவ்வாமை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு யோகா மற்றும் தெரபி வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், ஆயில் டிரீட்மென்ட், மசாஜ், நீராவி குளியல் உள்ளிட்டவைகளுடன் மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் யோகா பயில்வோர், வீடுகளுக்குச் சென்று தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அர்ச்சனா கூறியதாவது: மக்களுக்கு எண்ணற்ற நோய்களும், மன அழுத்தங்களும் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, யோகா பயிற்சி உதவுகிறது. தவிர, உடல் ஆரோக்கியத்தை சீராகவும், மனதை ஒருமுகப்படுத்தவும், ஞாபக மறதியை போக்கவும் முடியும். வயது, உடல் வலிமை, நோயின் தன்மைக்கு ஏற்ப யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. உடலையும், உள் உறுப்புகளையும் வளம் பெற செய்வதற்கும், புத்துணர்ச்சி அடைய செய்வதற்கும் இதுபோன்ற சிகிச்சை முறைகள் ஏதுவாக இருக்கும். இனி வரும் நாட்களில், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களின் ஆரோக்கியம் மேம்படவும், நினைவாற்றல் வளர்க்கவும் எளிய யோகா பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.