/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம் குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம்
குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம்
குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம்
குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம்
ADDED : ஜூன் 14, 2024 11:56 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட, குறு விவசாயிகள் அரசு மானியம் பெற ஆதார் பதிவு கட்டாயம் என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை அரசு வழங்கி வருகிறது. இதில், பெரும்பாலானோர் பெரிய மற்றும் சிறிய அளவிலான விவசாயிகள் அரசு திட்டங்களை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், குறு விவசாயிகளில் சிலருக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.
இதை தவிர்க்கும் நோக்கில், 23 சென்ட் அல்லது அதற்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் ஒரு சர்வே நம்பரில் உள்ள நில உட்பிரிவில், 23 சென்டிற்கும் குறைவாக உள்ள நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு எண் மற்றும் மொபைல்போன் நம்பர் கொண்டு தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதன் வாயிலாக, அரசு மானியங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெரும். இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.