/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காந்தி ஆசிரமத்தில் மாணவர் சேர்க்கை காந்தி ஆசிரமத்தில் மாணவர் சேர்க்கை
காந்தி ஆசிரமத்தில் மாணவர் சேர்க்கை
காந்தி ஆசிரமத்தில் மாணவர் சேர்க்கை
காந்தி ஆசிரமத்தில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூன் 27, 2024 09:50 PM
பொள்ளாச்சி : ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தில் உள்ள விடுதியில், ஆதரவற்ற, ஏழை மாணவ, மாணவியருக்கான சேர்க்கை நடக்கிறது.
ஆனைமலை மகாத்மா காந்த ஆசிரமத்தில், 5 வயது முதல் 14 வயது வரையிலான ஆதரவற்ற ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு, கட்டணம் கிடையாது.
அவ்வகையில், குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வியுடன் சேர்த்து, தெய்வபக்தி, தேசபக்தியுடன், தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், ஹார்மோனியம், ஓவியம், கிராமியக் கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இயற்கை வாழ்வியல் மற்றும் யோகா உடற்பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.
இங்கு பயிலும், மாணவ, மாணவியருக்கு சத்தான உணவு, பசும்பால், பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள், 90432-00016 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மகாத்மா காந்தி ஆசிரம சட்ட உதவி வக்கீல் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.