/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூப்பர் பாஸ்பேட், காம்பிளக்ஸ் உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை சூப்பர் பாஸ்பேட், காம்பிளக்ஸ் உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
சூப்பர் பாஸ்பேட், காம்பிளக்ஸ் உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
சூப்பர் பாஸ்பேட், காம்பிளக்ஸ் உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
சூப்பர் பாஸ்பேட், காம்பிளக்ஸ் உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 16, 2024 10:36 PM
கோவை;கோவை மாவட்ட விவசாயிகள் டி.ஏ.பி., உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்பிளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் நல்ல பருவ மழை பெய்துள்ளதால், விவசாயிகள் அதிகளவில் பயிர் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் சோளம் 3449.6 ஏக்கரிலும், பயிறு வகைகள் 803 ஏக்கரிலும், எண்ணெய் வித்துக்கள் 2762.6 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த சாகுபடிக்கு தேவையான உரம், போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தென்னை மரத்திற்கு நீரில் கரையக் கூடிய வெள்ளை பொட்டாஷ் உரத்தை, இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பன்னாட்டு சந்தையில் டி.ஏ.பி., உரம் 50 கிலோ ரூ.1350க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ ரூ.610க்கும், அம்மோனியம் பாஸ்பேட் 50 கிலோ ரூ.1220க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் வித்து பயிர்களின் மகசூல் அதிகரிப்பதுடன், எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது.
சூப்பர் பாஸ்பேட் உரம், டி.ஏ.பி., உரத்தினை விட குறைவாகவே மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
டி.ஏ.பி., உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கிய, சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்பிளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.