/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 26, 2024 10:56 PM
போத்தனூர் : மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஈச்சனாரி அடுத்து கற்பகம் பல்கலை., அருகே நேற்று ஊர்வலத்தை, மாவட்ட எஸ்.பி., பத்திநாராயணன், கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, மாணவர்கள் ஏந்திச் சென்றனர். கோவை --- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே ஊர்வலம் மலுமிச்சம்பட்டியை சென்றடைந்தது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.