ADDED : ஜூலை 30, 2024 01:47 AM

கோவை:கோவை- சிறுவாணி சாலை நாதகவுண்டன்புதுார் அஷ்டபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியன்று, 206 யாகசாலை அமைத்து வேதமந்திரங்களை சொல்லி யாகசாலை முன் பக்தர்கள் அமர்ந்து யாகத்தில் பங்கேற்கின்றனர்.
இது குறித்து ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம், பைரவர் பீடாதிபதி தவத்திரு கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கூறியதாவது: வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் இடையில் நிற்கும் தடைகளை தகர்த்தெறிபவர் பைரவர். செய்யும் தொழில் வளர்ச்சியடையவும் அஷ்ட பைரவர் வழிபாடு மிகவும் அவசியம்.
தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், எண்ணிய காரியம் நிறைவேறும்.
அதனால் தேய்பிறை அஷ்டமிதோறும், 206 யாக வேள்விகள் நடத்துவது வழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.