/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாரதி சிந்தனையாளர் பணி மைய ஆண்டு விழா பாரதி சிந்தனையாளர் பணி மைய ஆண்டு விழா
பாரதி சிந்தனையாளர் பணி மைய ஆண்டு விழா
பாரதி சிந்தனையாளர் பணி மைய ஆண்டு விழா
பாரதி சிந்தனையாளர் பணி மைய ஆண்டு விழா
ADDED : ஜூலை 17, 2024 12:08 AM
அன்னுார்:அன்னூரில் பாரதி சிந்தனையாளர் பணி மையம், 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் சார்பில், 52வது ஆண்டு விழா வருகிற, 21ம் தேதி மதியம் தாசபளஞ்சிக சங்க மண்டபத்தில் நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு மாணவ, மாணவியரின் நாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
கவிஞர் உமா மகேஸ்வரி, 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்னும் தலைப்பில் பேசுகிறார்.
அத்திக்கடவு வேலுநாச்சியார் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி உள்பட பலர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.