Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகராட்சி எல்லையை விஸ்தரிக்கலாமா, வேண்டாமா? பொதுமக்கள் கருத்தறிய உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்

மாநகராட்சி எல்லையை விஸ்தரிக்கலாமா, வேண்டாமா? பொதுமக்கள் கருத்தறிய உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்

மாநகராட்சி எல்லையை விஸ்தரிக்கலாமா, வேண்டாமா? பொதுமக்கள் கருத்தறிய உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்

மாநகராட்சி எல்லையை விஸ்தரிக்கலாமா, வேண்டாமா? பொதுமக்கள் கருத்தறிய உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்

ADDED : ஜூன் 30, 2024 12:44 AM


Google News
கோவை மாநகராட்சியுடன், அருகாமையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கலாமா, வேண்டாமா என, ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் கருத்தறிந்து, கிராம சூழலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. 2011ல் இணைத்த பகுதிகளிலேயே, இன்னும் உட்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு செய்யவில்லை. மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, எல்லையை விஸ்தரித்துக் கொண்டே சென்றால், மக்களுக்கு எவ்வித வசதியும் முழுமையாக சென்றடையாத சூழலே ஏற்படக்கூடும்.

கோவை, ஜூன் 30-

கோவை மாவட்டம், 4,723 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. இதில், நகர்ப்பகுதி - 1,519 சதுர கி.மீ., ஊரக பகுதி - 3,104 சதுர கி.மீ., கோவை மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 12 ஒன்றியங்கள், 33 பேரூராட்சிகள், 228 கிராம ஊராட்சிகள், ஒரு மாவட்ட பஞ்சாயத்து ஆகியவை உள்ளன.

இதில், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் இணைந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம், வரும் டிச., மாதம் முடிகிறது. ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கிறது.

தமிழக அரசு உத்தரவு


இச்சூழலில், நகர்ப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளாட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்கலாமா; எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை சேர்க்கலாம் என்கிற பரிந்துரையை அனுப்ப, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, கோவை மாநகராட்சியை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் கருத்து கோரியுள்ளது. ஊராட்சி நிர்வாகங்கள் இசைவு தரும் பட்சத்தில், மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சி எல்லை, 2011ல் விஸ்தரிக்கப்பட்டு, 100 வார்டுகளாக பிரிக்கப்பட்டது. குறிச்சி, குனியமுத்துார், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று நகராட்சிகள், வடவள்ளி, வீரகேரளம், துடியலுார், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, காளப்பட்டி ஆகிய ஏழு பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி ஊராட்சி ஆகியவை, கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

குடிநீருக்கே தவிப்பு


மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 13 ஆண்டுகளாகி விட்டன; இன்னும் உட்கட்டமைப்பு வசதிகள் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீருக்கே அப்பகுதி மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

24 மணி நேர குடிநீர் திட்டம் கூட, 2011க்கு முன்பிருந்த பழைய மாநகராட்சியின், 60 வார்டு பகுதிகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

குறிச்சி, குனியமுத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. ரோடு வசதி படுமோசம். வீரகேரளம், வெள்ளக்கிணறு, விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பின்தங்கி இருக்கின்றன.

இச்சூழலில், மீண்டும் அருகாமையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்துக் கொண்டே சென்றால், நகரம் விரிவடையுமே தவிர, மாநகராட்சி நிர்வாகத்தால், போதிய அடிப்படை வசதிகளை செய்து தர முடியாது. மாநகராட்சி எல்லையை விஸ்தரிக்கும்போது, அங்குள்ள மக்கள் தொகையை கணக்கிட வேண்டும்; அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

நிலத்தின் மதிப்பு உயரும்


மாநகராட்சியுடன் ஊராட்சி பகுதிகள் இணைந்து விட்டதாக அறிவித்தால், நிலத்தின் மதிப்பு அபரிமிதமாக உயரும்; வீட்டு வாடகை அதிகரிக்கும்; சொத்து வரி உயரும்; மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவி பெற முடியாது; 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பயனடைய முடியாது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

அதனால், மாநகராட்சி எல்லையை விஸ்தரிப்பு செய்வதற்கு முன், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியுமா என்பதை, மாவட்ட நிர்வாகம் சிந்திக்க வேண்டும். அதற்கான வசதிகளை உருவாக்கி விட்டு, மாநகராட்சி எல்லையை விஸ்தரிக்க முன்வர வேண்டும்.

இச்சூழலில், மாநகராட்சியை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்கள் தொகை, குடியிருப்பு, வேளாண் பரப்பு, தொழில் வாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து, ஆய்வறிக்கை சமர்ப்பிக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாநகராட்சியுடன் ஊராட்சி பகுதிகள் இணைந்து விட்டதாக அறிவித்தால், நிலத்தின் மதிப்பு அபரிமிதமாக உயரும்; வீட்டு வாடகை அதிகரிக்கும்; சொத்து வரி உயரும்; மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவி பெற முடியாது; 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பயனடைய முடியாது உள்ளிட்ட, பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

'மக்களின் விருப்பத்தை பொறுத்தது'

கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டதற்கு, ''மாநகராட்சி எல்லையை விஸ்தரிப்பு செய்வது தொடர்பாக, தமிழக அரசு கருத்துரு கேட்டுள்ளது. ஊராட்சிகளை முழுமையாக மாநகராட்சியோடு இணைக்கும் எண்ணம் இல்லை. ஊராட்சிகளில் உள்ள சில கிராமங்கள், நகரப்பகுதியை ஒட்டியிருக்கும். அப்பகுதி மக்கள், மாநகராட்சியோடு இணைய விருப்பப்படுவர்.புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் விரும்ப மாட்டார்கள். மாநகராட்சியுடன் இணைந்தால், 100 நாள் வேலை திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற பயன்கள் கிடைக்காது. மக்களின் விருப்பத்தை பொறுத்தது. அந்தந்த ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அதன் பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் விருப்பத்தை அறியாமல், இந்தெந்த பகுதிகள் மாநகராட்சியோடு இணைவதாக கூறினால், அவர்கள் அச்சப்படும் சூழல் ஏற்படும். கால அவகாசம் கொடுக்கப்படவில்லை,'' என்றார்.



'விஸ்தரிப்பு செய்வது அரசின் முடிவு'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''ஊராட்சிகள் விரும்புவதை பொறுத்து, மாநகராட்சி எல்லை விஸ்தரிக்கப்படும். தமிழக அரசு முன்மொழிவு கேட்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசித்து கருத்துரு அனுப்பப்படும். விஸ்தரிப்பு செய்வது அரசின் முடிவு,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us