ADDED : ஜூலை 16, 2024 11:55 PM
கோவை;சரவணம்பட்டி போலீசார் கணபதி, கட்டபொம்மன் வீதியில் ரோந்து சென்றனர். அப்போது, மணியகாரன்பாளையத்தில் தங்கியிருக்கும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், அழகர் சாமி நகரை சேர்ந்த சோமன்,48, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கோபாலாகிருஷ்ணன்,57, காந்திமாநகரை சேர்ந்த மணிகண்டன்,47 ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்து, தடைசெய்யப்பட்ட, 1,296 கேரள லாட்டரிகள் மற்றும் ரூ.7,150 ரொக்கம்,மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.