/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தைப்பருவ புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம் குழந்தைப்பருவ புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம்
குழந்தைப்பருவ புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம்
குழந்தைப்பருவ புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம்
குழந்தைப்பருவ புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம்
ADDED : ஜூன் 27, 2024 10:40 PM

'குழந்தைப்பருவ புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எளிதில் குணப்படுத்த முடியும்; அவர்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய முடியும்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ருமேஷ் சந்தர் கூறினார்.
அவர் கூறியதாவது:
பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயை குழந்தைப்பருவ புற்றுநோய் என்கிறோம். சமீபத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ ஆய்வு ஒன்றில் இந்தியாவில், கண்டறியப்படும் புற்றுநோயாளிகளில், 4 சதவீதம் பேர் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
குழந்தைகள் தொடர்ச்சியாக எடை குறைவது; அதிகாலையில் ஏற்படும் தலைவலி மற்றும் வாந்தி; கால்களிலோ, மூட்டுகளிலோ வலி, வீக்கம்; கழுத்து, மார்பு, தொடை இடுக்கு, அக்குள் பகுதிகளில் ஏற்படும் நெறிக்கட்டி; பார்வையில் மாறுபாடு இருப்பது, கண்கள் வெளிறிப்போவது; எவ்வித நோய் தொற்றும் இல்லாமல், அடிக்கடி காய்ச்சல் வருவது; சாதாரண சிராய்ப்பு ஏற்பட்டாலும் அதிகமாக ரத்தக்கசிவு இருப்பது; நீண்ட காலமாக களைப்பும் சோர்வுமாக குழந்தைகள் இருப்பது போன்றவை குழந்தைப்பருவ புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.
மேலும், ரத்தசோகை, ஈறுகளில் ரத்தம் கசிதல், தீராத காய்ச்சல், வயிறு வீக்கம், எலும்புகளில் வலி போன்றவை ரத்தப்புற்று நோயின் அறிகுகளாகும். இவற்றை உறுதி செய்ய, ரத்தம், திசு மாதிரி, எலும்பு மஜ்ஜை, சி.டி.,ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை தனிப்பிரிவு உள்ளது. இங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவையான அனைத்து வசதியும் உள்ளது. குழந்தை பருவ புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், எளிதில் குணப்படுத்த முடியும்.
மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.