/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'சாக்லேட்டுகளுக்கு கிடைக்கும் மதிப்பு கடலை மிட்டாய்க்கு கிடைப்பதில்லை!' 'சாக்லேட்டுகளுக்கு கிடைக்கும் மதிப்பு கடலை மிட்டாய்க்கு கிடைப்பதில்லை!'
'சாக்லேட்டுகளுக்கு கிடைக்கும் மதிப்பு கடலை மிட்டாய்க்கு கிடைப்பதில்லை!'
'சாக்லேட்டுகளுக்கு கிடைக்கும் மதிப்பு கடலை மிட்டாய்க்கு கிடைப்பதில்லை!'
'சாக்லேட்டுகளுக்கு கிடைக்கும் மதிப்பு கடலை மிட்டாய்க்கு கிடைப்பதில்லை!'
ADDED : ஜூலை 13, 2024 11:30 PM

கோவை சுங்கம் பகுதியில் நாட்டார் கலை ஆட்டங்களுக்கான அரங்கம் திறக்கப்பட்டது. இங்கு பறை இசை ஆட்டம், துடும்பு இசை ஆட்டம், ஒயிலாட்டம், உடுக்கை இசை, பெட்டிப்பறை, நாட்டார் பாடல்கள், செண்டைமேளம், சதிராட்டம் (பரதம்), செவ்வியல் இசை, மேற்கத்திய ஆட்டம், சிலம்பம், அடிமுறை களரி, வள்ளி கும்மி ஆகியவை பயிற்றுவிக்கப்பட உள்ளது.
திறப்பு விழாவிற்கு நாட்டார் கலைஞரும், திரைப்பட நடிகையுமான தீபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது;
அனைத்து கலைகளுக்கும் மூல ஆதாரமாக இருப்பது கிராமிய கலைகள் தான். ஆனால், சாக்லேட்டுகளுக்கு தரும் மதிப்பை, கடலை மிட்டாய்க்கு கொடுப்பதில்லை. இதனால், கிராமிய கலைகள் அழிந்து வருகின்றன.
தப்பாட்டத்தை மரண வீடுகளில்தான் அடிப்பார்கள் என, தவறாக புரிந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. தற்போது படித்த இளைஞர்கள், பறையை கையில் பிடித்திருப்பதை பார்க்கும் போது, மிகவும் ஆச்சரியமாக இருகிறது.
இது பாமர மக்களுக்கான கலை மட்டும் கிடையாது. முதலில் இதனை, படித்தவர்கள் தெரிந்து கொண்டாலே அனைவரையும் இக்கலை சென்றடையும். கிராமிய கலைகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
மீண்டும் இக்கலை, பெரிய வளர்ச்சி அடைய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இசை கல்லுாரிகள் இருக்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.