/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு
மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு
மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு
மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு
கடும் எதிர்ப்பு
அதனால் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி, திட்டம் கைவிடப்பட்டது. வேறு வழியின்றி, தமிழக அரசே, பை பாஸ் அமைக்க முடிவெடுத்தது. ஆணையம் போட்ட அதே திட்ட அறிக்கையை வைத்து, மீண்டும் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்தால் ரத்து
அதற்குள் ஐந்தாண்டுகள் கடந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் உட்பட எந்தத் தொகுதியிலும் தி.மு.க., ஜெயிக்கவில்லை. இந்த கால இடைவெளியில் நிலம் கையகப்படுத்துவதற்கான மதிப்பு, ரூ.610 கோடியாக எகிறியது. தோற்றுப்போன ஒரு மாவட்டத்தில், எதற்காக இவ்வளவு தொகை செலவிட வேண்டுமென்று நினைத்த அரசு, மேட்டுப்பாளையம் பை பாஸ் திட்டத்தையே ரத்து செய்தது.
மூன்று பாலங்கள்
அத்துடன் சேர்த்து, கோவை, சுந்தராபுரம் சந்திப்பு, 'எல் அண்ட் டி' பை பாஸ் சுங்கம் சந்திப்பு-பாப்பம்பட்டி பிரிவு வரை, சத்தி ரோட்டில் டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து 2.4 கி.மீ.,துாரம் வரை என மேலும் 3 பாலங்கள் கட்டவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 2022 துவக்கத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி, நிதியும் ஒதுக்கியது.
மூன்று பணிகள்
இதுகுறித்து, தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளரிடமிருந்து, மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் சென்னை மண்டல அலுவலருக்கு, கடந்த 14ல் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.