/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வழித்தடத்தை குறிப்பிடாத டவுன் பஸ்களால் குழப்பம்வழித்தடத்தை குறிப்பிடாத டவுன் பஸ்களால் குழப்பம்
வழித்தடத்தை குறிப்பிடாத டவுன் பஸ்களால் குழப்பம்
வழித்தடத்தை குறிப்பிடாத டவுன் பஸ்களால் குழப்பம்
வழித்தடத்தை குறிப்பிடாத டவுன் பஸ்களால் குழப்பம்
ADDED : ஜூலை 30, 2024 02:04 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் இருந்து, டவுன் பஸ்களுக்கு பதிலாக இயக்கப்படும் பஸ்களில், வழித்தட ஊர்களின் பெயர்கள் இடம்பெறாமல் இருப்பதால் பயணியர் குழப்பம் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரில் இருந்து, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள், ஏற்கனவே, தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்பட்டவை.
இதனால், பெரும்பாலான பஸ்களில், முகப்பு மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள வழித்தட ஊர்களின் பெயர்கள், அச்சிடாமல் உள்ளது. இதை பார்க்கும் பயணியர், தாங்கள் செல்லும் பகுதிக்கான பஸ் குறித்து அறிய முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதேபோல, சில நேரங்களில், வழித்தடம் மாற்றி இயக்கப்படும் பஸ் காரணமாகவும் குழப்பம் அடைகின்றனர்.
உள்ளூர் வழித்தடத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் எழுதப்படாததால், கிராமப்புற பயணியர் சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் கண்டக்டர் குரல் கொடுத்த பின்னரே, பயணியர் பஸ்களில் ஏறவும் முற்படுகின்றனர்.
காலை மற்றும் மாலையில் நெரிசல்மிக்க நேரங்களில், பிரதான வழித்தடங்களில் காத்திருப்போர், தங்கள் ஊருக்கான டவுன் பஸ் எது என, அடையாளம் தெரியாததால், பஸ்களில் ஏற தயங்குகின்றனர்.
எனவே, டவுன் பஸ்களில், வழித்தட ஊர்களின் பெயர்களை முறையாக இடம்பெறச் செய்ய வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.