/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நரசிங்கப்பெருமாள் கோவிலில் 'ஸ்வர்ண பல்லி' பிரதிஷ்டை நரசிங்கப்பெருமாள் கோவிலில் 'ஸ்வர்ண பல்லி' பிரதிஷ்டை
நரசிங்கப்பெருமாள் கோவிலில் 'ஸ்வர்ண பல்லி' பிரதிஷ்டை
நரசிங்கப்பெருமாள் கோவிலில் 'ஸ்வர்ண பல்லி' பிரதிஷ்டை
நரசிங்கப்பெருமாள் கோவிலில் 'ஸ்வர்ண பல்லி' பிரதிஷ்டை
ADDED : ஜூலை 17, 2024 01:09 AM

கோவை:ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நரசிங்கப்பெருமாள் கோவிலில், ஸ்வர்ண பல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே, 80 அடி ரோட்டில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நரசிங்கப் பெருமாள் கோவிலில், 43ம் ஆண்டு மஹோத்ஸவம் நேற்று துவங்கியது. காலை, 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் கருடக் கொடியேற்றம் நடந்தது.
மூன்று நாட்களும் இரவும், பகலும் இடைவிடாமல் 'சப்தாகமம்' எனும் ஹரி பஜனை நடக்கிறது. திரளான பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, திருவாரூர் ஸ்ரீ சங்கர நாராயண பீடம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ குரு சிவாஜி சந்தோஷ், ஸ்வர்ண பல்லி பிரதிஷ்டை செய்தார்.
குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ குரு சிவாஜி சந்தோஷ் கூறுகையில், ''தமிழகத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீரங்கத்தில் மட்டுமே, ஸ்வர்ண பல்லி பிரதிஷ்டை இருந்தது. தற்போது, கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக கோவையில், ஸ்வர்ண பல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு சகல பாவம், தோஷம் நீங்கும்; புண்ணியம் கிடைக்கும்,'' என்றார்.
இந்த சிறப்பு மகோத்ஸவம், நாளை நிறைவடைகிறது.