Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருத்துவ காப்பீடு தொகை கிடைப்பதில் காலதாமதம்

மருத்துவ காப்பீடு தொகை கிடைப்பதில் காலதாமதம்

மருத்துவ காப்பீடு தொகை கிடைப்பதில் காலதாமதம்

மருத்துவ காப்பீடு தொகை கிடைப்பதில் காலதாமதம்

ADDED : மார் 14, 2025 11:07 PM


Google News
அன்னுார்; அகில பாரத குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில், அன்னுார் கைகாட்டியில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அமைப்பின் வட்டாரத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அமைப்பின் மாநில தலைவர் ராஜண்ணன் பேசுகையில், ''மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவமனையில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற முடிவதில்லை. பணம் செலுத்தி சிகிச்சை பெற்றாலும், அதை திரும்ப பெறுவதில் நீண்ட தாமதமாகிறது. பென்ஷனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்,'' என்றார். 70 வயது நிரம்பியவர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். குறைந்தபட்ச பென்ஷனாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும்.

பென்சனர் மற்றும் குடும்ப பென்ஷனர் குறைகளை களைவதற்கு தலைமைச் செயலாளர் தலைமையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும், என வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இயக்க நெறியாளர் காளிச்சாமி, மாநில பிரதிநிதி நடராஜன், வட்டார செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் நடராஜன், உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us