/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்' 'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்'
'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்'
'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்'
'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்'
ADDED : ஜூலை 17, 2024 01:07 AM
கோவை;நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகையை, விரைந்து வழங்க வேண்டும் என, மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத்தினர், கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளர் சந்திரபிரகாஷ் கூறியதாவது:
மாநகராட்சி நிர்வாகம், 72 பில்களை ஒரே பட்டியலில் இணைத்து, அப்பட்டியலின்படி, பூர்த்தி செய்து தர வேண்டும். இந்நடைமுறையை புதிய பில்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
கடந்த, 5 - 7 ஆண்டுகளில் ஒப்பந்ததாரர்களுக்கு, 'வித்ஹெல்டு' தொகை கணக்கு பிரிவில் நிலுவையில் உள்ளது. இத்தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும்.
நீண்டகாலமாக உள்ள தொகைகளை வழங்க தாமதம் கூடாது. இனி வரும் காலங்களில் ஒப்பந்த பணிகளில் அனைவரும் பங்கேற்று, பணி செய்யும் வகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் உதயகுமார், பொருளாளர் அம்மாசையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.