/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாக்குறுதி நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் பேட்டி வாக்குறுதி நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் பேட்டி
வாக்குறுதி நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் பேட்டி
வாக்குறுதி நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் பேட்டி
வாக்குறுதி நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் பேட்டி
ADDED : ஜூன் 05, 2024 01:19 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெற்றார். ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல், தி.மு.க., முன்னணியில் இருந்ததால், அக்கட்சியினர் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ஓட்டு எண்ணிக்கை முகவர் பகுதியிலும், ஓட்டுச்சாவடி வாரியாக ஆர்வத்துடன் குறிப்பெடுத்தனர். இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு, தி.மு.க., வேட்பாளர் மாலை, 4:30 மணிக்கு வந்தார். அவருடன், கார்கள் அணிவகுத்தன.
முன்புற வாயிலில், போலீசார், அனுமதி பெற்ற வேட்பாளர் காரை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்கள் காரை உள்ளே அனுமதிக்க வேண்டும், என, காரை நகர்த்த மறுத்தனர். போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால், தி.மு.க., - போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈஸ்வரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தி.மு.க., அரசின் மூன்று ஆண்டு சாதனைகள், மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்காக என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களே, வெற்றிக்கு காரணம்.
தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன். இரு சட்டசபை தொகுதிக்கு, ஒரு எம்.பி., அலுவலகம் திறந்து, மக்களுக்கான பணிகள் மேற்கொள்வேன்.
சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தி, அதிகப்படியான ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன்.விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளையும், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்.
இவ்வாறு, கூறினார்.