/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரட்டிப்பு பயன் தரும் சோளம் விதைப் பண்ணை ஆய்வு இரட்டிப்பு பயன் தரும் சோளம் விதைப் பண்ணை ஆய்வு
இரட்டிப்பு பயன் தரும் சோளம் விதைப் பண்ணை ஆய்வு
இரட்டிப்பு பயன் தரும் சோளம் விதைப் பண்ணை ஆய்வு
இரட்டிப்பு பயன் தரும் சோளம் விதைப் பண்ணை ஆய்வு
ADDED : ஜூன் 28, 2024 11:33 PM
பெ.நா.பாளையம்;கோவை மாவட்டம், எஸ்.எஸ். குளம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில், பெருமளவில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
இடிகரை கிராமத்தில் வேளாண்துறை வாயிலாக அமைக்கப்பட்டுள்ள, 'சோளம் கோ-32' விதை பண்ணையை விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.
இதில் பயிர் விலக்கு துாரம், பிறபயிர்கள் கலப்பு மற்றும் நோய் போன்ற காரணிகள் ஆய்வு செய்யப்பட்டன. கோவை விதை சான்று அலுவலர் பிரியதர்ஷினி, உதவி விதை அலுவலர் விஜய் உடன் இருந்தனர்.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'சோளம் கோ- 32 ரகம், காரீப் பருவத்திற்கு ஏற்றது. 105 முதல், 110 நாட்களில் முதிர்ச்சி அடையும். இதில் தானிய மகசூல், 2.47 ஏக்கருக்கு 2,400 கிலோ மற்றும் தீவன மகசூல், 2.47 ஏக்கருக்கு, 6,500 கிலோ வரை கிடைக்கும். தானியமாகவும், சோளத்தட்டை கால்நடைகளுக்கு தீவனமாகவும், இரட்டிப்பு பயன் தரக்கூடியது.
இதில், கதிர்கள், மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். சோளம் கோ- 32 பயிர் செய்து, அதிக மகசூல் பெறலாம்' என்றனர்.