/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சொட்டு நீர் பாசனத்தால் 40 சதவீதம் தண்ணீர் மீதமாகும் சொட்டு நீர் பாசனத்தால் 40 சதவீதம் தண்ணீர் மீதமாகும்
சொட்டு நீர் பாசனத்தால் 40 சதவீதம் தண்ணீர் மீதமாகும்
சொட்டு நீர் பாசனத்தால் 40 சதவீதம் தண்ணீர் மீதமாகும்
சொட்டு நீர் பாசனத்தால் 40 சதவீதம் தண்ணீர் மீதமாகும்
ADDED : ஜூன் 03, 2024 11:12 PM
சூலுார்:'சொட்டு நீர் பாசனத்தின் மூலம், 40 சதவீதம் தண்ணீரை சேமிக்க முடியும்', என்று வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
பயிர்களுக்கு குறித்த நேரத்தில் தேவையான தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வது சொட்டு நீர் பாசனமாகும்.
இந்த பாசன முறை மூலம், வேர்களுக்கு அருகில் தண்ணீர் அளிக்கப்படுகிறது. அதிக நேரம் தண்ணீர் அளிக்கப்படுவதால், தட்டுப்பாடு என்பது இருக்காது. குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் அளிக்கப்படுகிறது.
இதனால், பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தேவையான ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் மகசூல் அதிகரிக்கும். தரமான பயிர்கள் கிடைக்கும். அதிக ஈரப்பதத்தினால் நோய்களும், களைகளும் கட்டுக்குள் இருக்கும். உரம், பூச்சி மருந்து செலவு குறையும்.
அந்த மருந்துகளை சொட்டு நீர் வழியாக தருவதால், சீராக அனைத்து பயிர்களுக்கும் கிடைக்கும். செலவும் குறையும். சொட்டு நீர் பாசனத்தால், 40 சதவீத தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.