/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாரதியார் பல்கலையில் போதை விழிப்புணர்வு பாரதியார் பல்கலையில் போதை விழிப்புணர்வு
பாரதியார் பல்கலையில் போதை விழிப்புணர்வு
பாரதியார் பல்கலையில் போதை விழிப்புணர்வு
பாரதியார் பல்கலையில் போதை விழிப்புணர்வு
ADDED : ஆக 04, 2024 11:07 PM
கோவை : பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், 'போதைப்பொருள் இல்லாத வளாகம்' என்ற கருவை அடிப்படையாக கொண்டு, விழிப்புணர்வு நிகழ்வு பல்கலையில் நடந்தது.
துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அஜீத்குமார் லால் மோகன், தேவையற்ற பழக்கவழக்கங்களை தவிர்க்க விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில், போதைப்பழக்கம், டிஜிட்டல் ஆகிய இரண்டு அடிமைத்தனமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான ஆலோசனை தேவையின் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில், பாரதியார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.