/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உழவர் சந்தை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்! உழவர் சந்தை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்!
உழவர் சந்தை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்!
உழவர் சந்தை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்!
உழவர் சந்தை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்!
ADDED : ஜூன் 27, 2024 09:49 PM
உடுமலை : உடுமலையில், கடந்த, 2000ம் ஆண்டில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆர்வத்தால், நாள்தோறும், 30 டன் வரை காய்கறி வரத்து உள்ளது. இந்நிலையில், உழவர் சந்தைக்குள் இடநெருக்கடி காரணமாக, நுகர்வோர், விவசாயிகள் பாதிக்கின்றனர்.
மேலும், சந்தை அருகே ரோட்டோரத்தில் அமைக்கப்படும் கடைகளால், அவ்வழியாக காலை நேரத்தில், போக்குவரத்து பாதிக்கிறது.
போக்குவரத்து நிறைந்த ரோட்டில், உழவர் சந்தைக்கு வருபவர்கள், வாகனங்களை நிறுத்தவும், போதிய இடம் கிடைப்பதில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் அனுப்பியுள்ள மனுவில், 'உடுமலை உழவர் சந்தையை விரிவுபடுத்தி, தேவையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வாகனங்களை நிறுத்த, இடம் ஒதுக்க வேண்டும்.
வேளாண்துறை தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தை முன் மழை நீர் தேங்குகிறது; குப்பையும் முறையாக அகற்றப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.