/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீ பிடித்து ஐந்து வாகனங்கள் நாசம் தீ பிடித்து ஐந்து வாகனங்கள் நாசம்
தீ பிடித்து ஐந்து வாகனங்கள் நாசம்
தீ பிடித்து ஐந்து வாகனங்கள் நாசம்
தீ பிடித்து ஐந்து வாகனங்கள் நாசம்
ADDED : மார் 13, 2025 06:17 AM
போத்தனூர்; கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் காஸ்டிங் தொழிற்சாலை ஒன்று உள்ளது. ஆனந்தராஜ் என்பவர் நிறுவனத்திற்கு சொந்தமான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை, பார்க்கிங் பகுதியில் நிறுத்திச் சென்றார்.
அதிகாலை 5:45 மணியளவில், பார்க்கிங் பகுதியில் தீப்பிடித்து வாகனங்கள் எரிந்தன. தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இதில் எலக்ட்ரிக் வாகனம் உள்பட, ஐந்து வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மூன்று வாகனங்கள் சிறிதளவு சேதத்துடன் மீட்கப்பட்டன.
சுந்தராபுரம் போலீசார் விசாரணையில், எலக்ட்ரிக் வாகனத்தில் தீப்பிடித்து, பிற வாகனங்களுக்கு பரவியது தெரிந்தது.