/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து பார்வதிஸ் அனுகிரகா பள்ளி சாம்பியன் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து பார்வதிஸ் அனுகிரகா பள்ளி சாம்பியன்
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து பார்வதிஸ் அனுகிரகா பள்ளி சாம்பியன்
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து பார்வதிஸ் அனுகிரகா பள்ளி சாம்பியன்
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து பார்வதிஸ் அனுகிரகா பள்ளி சாம்பியன்
ADDED : ஜூலை 17, 2024 01:11 AM

கோவை;பள்ளி மாணவர்களுக்கான 45வது சகோதயா கால்பந்து போட்டியில், பார்வதிஸ் அனுகிரகா பள்ளி சாம்பியன் கோப்பையை வென்றது.
அனன் சர்வதேச பள்ளி சார்பில், 45வது சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான ஐவர் கால்பந்து போட்டி பள்ளி மைதானத்தில் நடந்தது.
போட்டியை, போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அனன் சர்வதேச பள்ளி தலைவர் ராமச்சந்திரன், தாளாளர் கண்ணன், நிர்வாக இயக்குனர் ரேவதி, முதல்வர் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
'நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து 78 அணிகள் பங்கேற்றன. இதன் அரையிறுதிப்போட்டியில், பார்வதிஸ் அனுகிரகா பள்ளி அணி, 4 -1 என்ற கோல்கணக்கில் தி வெஸ்டர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியையும், கேம்போர்டு சர்வதேச பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில், எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில், பார்வதிஸ் அனுகிரகா பள்ளி அணி, 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில், கேம்போர்டு அணியை வீழ்த்தி, கோப்பையை தட்டிச்சென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.