/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென் திருப்பதியில் தங்க தேரோட்டம் தென் திருப்பதியில் தங்க தேரோட்டம்
தென் திருப்பதியில் தங்க தேரோட்டம்
தென் திருப்பதியில் தங்க தேரோட்டம்
தென் திருப்பதியில் தங்க தேரோட்டம்
ADDED : ஜூலை 17, 2024 12:26 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் தென்திருப்பதி திருவேங்கிட சுவாமி, ஸ்ரீவாரி ஆலயத்தில் ஆனிமாத புண்ணிய கால நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
காலை முதல் சிறப்பு ஆராதனைகள், சகஸ்ர நாமார்ச்சனை, நிவேதனம் சாற்றுமுறை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மாலையில், ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க தேர் கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக பவனி வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.