/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு ஐ.டி.ஐ., நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு அரசு ஐ.டி.ஐ., நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ., நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ., நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ., நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:20 AM
பெ.நா.பாளையம்;கோவை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) நடப்பு ஆண்டுக்கான இணையதள கலந்தாய்வு சேர்க்கை முடிவுற்ற நிலையில், தற்போது நேரடி சேர்கைக்கான தேதி இம்மாதம், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள இப்பயிற்சி நிலையத்தில், பயிற்சியில் சேர்வதற்கான தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். மேலும், வயது வரம்பு ஆண்களுக்கு, 14 முதல், 40 வரை என்றும், பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என, நிர்ணிக்கப்பட்டு உள்ளது.
இங்கு இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெக்கானிக், மெஷின் டூல் மெயின்டனன்ஸ், டர்னர், ஒயர் மேன், எம்.எம்.வி., உள்ளிட்ட இரண்டு ஆண்டு தொழில் பயிற்சிகளும், புட் ப்ரொடக்ஷன், இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கரேஷன் ஓராண்டு தொழில் பயிற்சிகளும், ஆறு மாத தொழில் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு சேரும் பயிற்சியாளர்களுக்கு பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், லேப்டாப், சைக்கிள், இலவச பஸ், பயண அட்டை, சீருடை, காலணிகள், மாதாந்திர உதவித் தொகை 750 ரூபாய், மூவலுார் ராமாமிர்தம் திட்டத்தில், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பிரதி மாதம் வழங்கப்படுகிறது.
பயிற்சி முடிவடையும் நேரத்தில் வளாக நேர்காணல் நடத்தி, வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 88254 34331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.