/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெண்களின் பாதுகாப்பு எப்படியிருக்கு! துறை ரீதியாக கூட்டம் நடத்தணும் பெண்களின் பாதுகாப்பு எப்படியிருக்கு! துறை ரீதியாக கூட்டம் நடத்தணும்
பெண்களின் பாதுகாப்பு எப்படியிருக்கு! துறை ரீதியாக கூட்டம் நடத்தணும்
பெண்களின் பாதுகாப்பு எப்படியிருக்கு! துறை ரீதியாக கூட்டம் நடத்தணும்
பெண்களின் பாதுகாப்பு எப்படியிருக்கு! துறை ரீதியாக கூட்டம் நடத்தணும்
ADDED : ஜூலை 16, 2024 11:31 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், துறை ரீதியான உயரதிகாரிகள், மாதந்தோறும் கூட்டம் நடத்தி, பெண்களின் மீதான பாதுகாப்பு நிலையை கண்டறிய வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நகர் மற்றும் கிராமங்களில் பெண்கள் மீதான அடக்குமுறைகள், வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, குடும்ப வன்முறை என நீண்டு கொண்டே உள்ளது. இதனை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும், அதன் நடைமுறை விதிகள், எளிதில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், உயரதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.
பொள்ளாச்சி தாலுகாவிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும், துன்புறுத்தல்களும் நடைபெறுவதாக புகார் எழுகிறது.
ஆனால், உயரதிகாரிகளின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால் காலம் கடந்து தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, பல பெண்கள், தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுக்க தயங்குகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பெண்கள் பாதுகாப்புக்கு, துறைகள் தோறும் விஷாகா கமிட்டி அமைக்கப்பட்டிருந்தாலும், அதன் மீது நம்பிக்கை ஏற்படுவதில்லை. துறை ரீதியான உயரதிகாரிகள் மாதந்தோறும், கூட்டம் நடத்தி பெண்களின் பாதுகாப்பு நிலையை கண்டறிய வேண்டும். தனியார் நிறுனங்களில் பெண்கள் பாதுகாப்பின் உண்மை தன்மையை அறிய வேண்டும்,' என்றனர்.