/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வருங்காலம் இனி 'ட்ரோன்' காலம் வசந்த காலத்துக்கு மாறுகிறது 'களம்' வருங்காலம் இனி 'ட்ரோன்' காலம் வசந்த காலத்துக்கு மாறுகிறது 'களம்'
வருங்காலம் இனி 'ட்ரோன்' காலம் வசந்த காலத்துக்கு மாறுகிறது 'களம்'
வருங்காலம் இனி 'ட்ரோன்' காலம் வசந்த காலத்துக்கு மாறுகிறது 'களம்'
வருங்காலம் இனி 'ட்ரோன்' காலம் வசந்த காலத்துக்கு மாறுகிறது 'களம்'
ADDED : ஜூலை 14, 2024 10:59 PM
கோவை:விவசாயத்தில் மிகப்பெரிய விஷயம், உரம், மருந்து தெளிப்பது. நெல் நடவு முதல் அறுவடை வரை, இதற்கான ஆட்கள் கிடைப்பது சவாலாக இருக்கிறது.
இதற்காக, ட்ரோன் தொழில்நுட்பம் வந்து விட்டது. இதன் வாயிலாக எளிதில் மருந்து தெளித்து விடலாம். இந்த ட்ரோனை இயக்க, ஒரு நபர் போதுமானது.
அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில், இதற்கான ஒரு அரங்கில், வீட்டு மனை குறித்து துல்லியமாக அளவெடுக்கவும், கல் குவாரி மற்றும் மணல் குவாரிகளின் அளவுகளை கணக்கெடுக்கவும், பெரிய, பெரிய நிறுவனங்களின் கண்காணிப்புக்காகவும் என, ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதாக விளக்கினர். பகல் நேரத்தில் 2 கி.மீ., துாரத்துக்கும், இரவு நேரங்களில் 800 மீட்டருக்குள்ளும், இந்த ட்ரோன்களை பயன்படுத்த முடியுமாம்.
தற்போது, விவசாயத்துக்கு மருந்து தெளிப்பதில், ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 10 லிட்டர் மருந்தில், ஒரு ஏக்கருக்கு ட்ரோன் வாயிலாக மருந்து தெளிக்க, ஐந்து முதல் 7 நிமிடங்கள் வரைதான் ஆகுமாம். ஐந்து செட் பேட்டரிகள் இருந்தால், ஒரு நாளில், 36 ஏக்கர் வரை பயன்படுத்த முடியும்.