/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும் தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும்
தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும்
தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும்
தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும்
ADDED : ஜூன் 27, 2024 09:47 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதி விவசாயிகள் தேனீ வளர்க்க தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தேனீ வளர்ப்பில் ஈடுபட தோட்டகலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்ககம் தேனீ வளர்ப்பு வாயிலாக, 30 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது.
தேனீ வளர்ப்பால், அயல் மகரந்த சேர்க்கை வாயிலாக பயிர் மகசூல் அதிகரிக்கிறது. மேலும், தேனீ வளர்ப்பின் வாயிலாக செடிகள் மற்றும் பழங்களில் 30 முதல் 50 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது. தேனீ வளர்ப்பு மற்றும் தேனை மதிப்புக்கூட்டி விற்கும் போது கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே, தேனீ வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள், கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.