Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதை பொருள், கள்ளச்சாராயம் ஒழிக்க அதிகாரிகள்  ஆய்வு; அவசியம்: கலெக்டர்

போதை பொருள், கள்ளச்சாராயம் ஒழிக்க அதிகாரிகள்  ஆய்வு; அவசியம்: கலெக்டர்

போதை பொருள், கள்ளச்சாராயம் ஒழிக்க அதிகாரிகள்  ஆய்வு; அவசியம்: கலெக்டர்

போதை பொருள், கள்ளச்சாராயம் ஒழிக்க அதிகாரிகள்  ஆய்வு; அவசியம்: கலெக்டர்

ADDED : ஜூன் 26, 2024 10:49 PM


Google News
கோவை : போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகளை, தீவிரமாக மேற்கொள்வதற்கான சிறப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த, கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என, தீவிர கண்காணிப்பு மற்றும் திடீர் சோதனை வாயிலாக கண்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெத்தனால், எத்தனால் பரிவர்த்தனை மற்றும் கொண்டு செல்வதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள், விழிப்புடன் செயல்பட வேண்டும்.

தங்களது கிராமத்தில், கள்ளச்சாராய விற்பனை இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். அப்படி இருந்தால், போலீஸ் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வருவாய், போலீஸ், உணவுப்பாதுகாப்பு துறைகள் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி, திடீர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகே ஆய்வு மேற்கொண்டு, போதைப்பொருள் விற்பனையினை ஒழிக்க, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தல், வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளசாராயம் காய்ச்சுதல், கள் விற்பனை செய்வது தொடர்பாக, மக்கள் புகார் அளிக்கலாம்.

கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு; 76049 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ அல்லது 10581 என்ற எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம்.

இக்கூட்டத்தில் எஸ்.பி.,பத்ரிநாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கத் குமார் ஜெயின், மாநகர துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் (கலால்) ஜெயச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us