/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காற்றில் ஆடும் விளம்பர பதாகை கண்டுகொள்ளாத அதிகாரிகள் காற்றில் ஆடும் விளம்பர பதாகை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
காற்றில் ஆடும் விளம்பர பதாகை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
காற்றில் ஆடும் விளம்பர பதாகை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
காற்றில் ஆடும் விளம்பர பதாகை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூலை 30, 2024 02:03 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், தெருவிளக்கு கம்பங்களில் விளம்பர பதாகை கட்டியுள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகரப்பகுதியில், விதிமுறைகள் மீறி பிளக்ஸ்கள் ரோட்டோரத்தில் வைக்கப்படுகிறது. சமீப காலமாக, ரோட்டோரத்திலும், மைய தடுப்பிலும் உள்ள மின்கம்பங்களில் விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
மின்கம்பங்கள், மரங்கள் என எதையும் விடாமல், விளம்பரம் தொங்க விடப்படுகின்றன. அதில், மாநில நெடுஞ்சாலையான பாலக்காடு ரோட்டில், நெரிசலை தவிர்க்க 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டுள்ளது.
சென்டர் மீடியன் இடையே உள்ள தெருவிளக்கு கம்பங்களிலும், சின்ன, சின்ன விளம்பர பதாகைகள் கட்டித்தொங்க விடப்பட்டுள்ளன. இவை, தற்போது வீசும் பலத்த காற்றுக்கு, வேகமாக ஆடுவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சியில், தற்போது பிளக்ஸ் கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. தனியார் கட்டடங்களில் பிளக்ஸ்கள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று மின்கம்பங்கள், தெருவிளக்கு கம்பங்களில், சிறு அளவிலான விளம்பர பிளக்ஸ்கள், பதாகைகள் கம்பியால் கட்டி தொங்க விடப்படுகின்றன. இவை காற்றில் ஆடுவதுடன் விபத்துக்கு அச்சாரமிடுகின்றன.
வாகன ஓட்டுநர்கள் மீது இவை விழுந்து விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் கவனம் செலுத்தி, இதுபோன்று விதிமீறல்களை கட்டுப்படுத்தவும், அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.