/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பில்லூர் அணை நிரம்பி வழிகிறது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பில்லூர் அணை நிரம்பி வழிகிறது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பில்லூர் அணை நிரம்பி வழிகிறது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பில்லூர் அணை நிரம்பி வழிகிறது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பில்லூர் அணை நிரம்பி வழிகிறது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூலை 16, 2024 11:15 PM
மேட்டுப்பாளையம்:பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஒன்றான, அவலாஞ்சியில் அதிகபட்சமாக, 372 மில்லி மீட்டர் கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக, 18,000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வருகின்ற தண்ணீரை அப்படியே வெளியேற்றுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை வனப்பகுதியில், பில்லூர் மலைப்பகுதியில், 100 அடி உயரத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவித்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவார்.
நேற்று முன்தினம் இரவு பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளது. இதில் அவலாஞ்சியில், 372 மில்லி மீட்டர், அப்பர் பவானியில்,248 மி.மீ., குந்தாவில், 83 மி.மீ., கெத்தையில், 19 மி.மீ., பரளியில், 5 மி.மீ., பில்லூரில், 8 மி.மீ., மழை பெய்துள்ளது. அதனால் அதிகாலை, 4:00 மணிக்கு, வினாடிக்கு, 22,000 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்துள்ளது. அணையின் நீர்மட்டம், 97 அடியை எட்டியதை அடுத்து, அணை நிரம்பியதாக அறிவிக்கப்பட்டது.
மின்சாரம் உற்பத்தி செய்ய, 6000 கனஅடி தண்ணீரும், அணையில் உள்ள நான்கு மதகுகளில் தலா, 4,000 கன அடி என, 16,000 கன அடி உள்பட, மொத்தம், 22,000 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகபட்சமாக, அணையில் இருந்து பவானி ஆற்றில் திறந்து விட்டனர். இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடுவதால், பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம், மின்சாரம் உற்பத்தி செய்ய, 6000 கன அடி தண்ணீரும், நான்கு மதகுகளில், 12 ஆயிரத்து, 120 கன அடி தண்ணீர் என, மொத்தமாக வினாடிக்கு, 18 ஆயிரத்து,120 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.
இது குறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் கூறியதாவது: பில்லூர் அணை நிரம்பியதை அடுத்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவதால், வெள்ள அபாயம் ஏற்பட உள்ளது. எனவே தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் வேண்டும். மேலும் வனபத்ரகாளியம்மன் கோவில், உப்புப்பள்ளம், மேட்டுப்பாளையம், ஊமப்பாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். இவ்வாறு தாசில்தார் கூறினார்.
_____
படங்கள் திரு பாலாஜி. மற்றும் மெயிலில் அனுப்பி உள்ளேன் சார்.