/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடு வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ஏமாற்றிய இருவர் மீது போலீசார் வழக்கு வீடு வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ஏமாற்றிய இருவர் மீது போலீசார் வழக்கு
வீடு வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ஏமாற்றிய இருவர் மீது போலீசார் வழக்கு
வீடு வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ஏமாற்றிய இருவர் மீது போலீசார் வழக்கு
வீடு வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ஏமாற்றிய இருவர் மீது போலீசார் வழக்கு
ADDED : மார் 13, 2025 06:19 AM
கோவை; வீடு வாங்கித் தருவதாக, தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சக்திவேல், 37; கோவை பீளமேட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோவையில் சொந்தமாக வீடு வாங்க திட்டமிட்டார். ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்து, தொடர்பு கொண்டு பேசினார்.
ராமநாதபுரத்தில் உள்ள அந்த நிறுவனத்துக்கு நேரில் சென்றார். அங்கிருந்த ஜெகநாதன் என்பவர், 'ரூ. 43 லட்சத்திற்கு வீடு உள்ளது. ரூ.8 லட்சம் முன் பணம் செலுத்த வேண்டும்' என கூறியுள்ளார். சக்திவேல் ரூ.8 லட்சம் கொடுத்தார்.
பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும், ஜெகநாதன் வீட்டை காட்டாமல் இருந்துள்ளார். சக்தி வேல் தனது பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு ஜெகநாதன், பல்வேறு காரணங்கள் கூறி, காலம் கடத்தி வந்துள்ளார்.
சக்திவேல் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். கட்டுமான நிறுவன உரிமையாளர் கணபதி, செந்தில் நகரை சேர்ந்த ஜெகநாதன், 47 மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.