/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வழிகாட்டு மதிப்பீடு தேர்வு 2ம் கட்டமாக நடத்த ஆயத்தம் வழிகாட்டு மதிப்பீடு தேர்வு 2ம் கட்டமாக நடத்த ஆயத்தம்
வழிகாட்டு மதிப்பீடு தேர்வு 2ம் கட்டமாக நடத்த ஆயத்தம்
வழிகாட்டு மதிப்பீடு தேர்வு 2ம் கட்டமாக நடத்த ஆயத்தம்
வழிகாட்டு மதிப்பீடு தேர்வு 2ம் கட்டமாக நடத்த ஆயத்தம்
ADDED : ஜூலை 16, 2024 11:32 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முதற்கட்டமாக, உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு காரணங்களால் முதற்கட்ட தேர்வை நிறைவு செய்யாத மாணவர்களுக்கு, வரும், 23 முதல், 25ம் தேதி வரை, இரண்டாம் கட்டமாக, உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு தேர்வு நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக, அன்றைய தேதிகளில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை மதிப்பீடு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு தேர்வை, நிறைவு செய்த மாணவர்களின் விபரங்கள், எமிஸ் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அவ்வகையில், http://locsrv.in:8080 என்ற இணையதளத்தில் மதிப்பீடு அப்ளிகேஷன் தெரிவதை உறுதி செய்து சரிபார்க்கப்படும்.
அனைத்து மாணவர்களின் விபரங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டவுடன், நற்சான்றிதழ்களைப் புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.