/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சங்கப் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு சங்கப் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு
சங்கப் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு
சங்கப் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு
சங்கப் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு
ADDED : மார் 13, 2025 06:20 AM

கோவை; கோவை மாவட்டத்தில் பணிபுரியும் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு, புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.
நடப்பாண்டு, கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பு எண் 5ன்படி, கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு, பணிநிலைத் திறனை மேம்படுத்த, அவர்கள் பணிசார்ந்த புத்தாக்கப் பயிற்சி மற்றும் ஆளுமைத்திறன் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, கோவை மாவட்டத்தில் பணிபுரியும் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு, ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி, ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடந்தது. கோவை மண்டல இணைப்பதிவாளர் அழகிரி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் பணிபுரியும் துணைப்பதிவாளர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளரும், முதல்வருமான கீதா மேற்கொண்டார்.