Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேயர் பதவி காலியாக இருக்கிறது தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை

மேயர் பதவி காலியாக இருக்கிறது தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை

மேயர் பதவி காலியாக இருக்கிறது தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை

மேயர் பதவி காலியாக இருக்கிறது தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை

ADDED : ஜூலை 09, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
கோவை;கோவை மேயர் பதவி காலியாக இருப்பதாக, மாநில தேர்தல் ஆணையத்துக்கு கலெக்டர் கிராந்தி குமார் நேற்று அறிக்கை சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து, கல்பனாவுக்கு, மாநகராட்சியில் இருந்து வழங்கப்பட்ட கார் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்கள், திரும்பப் பெறப்பட்டன.

கோவை மாநகராட்சி மேயராக இருந்தவர், 19வது வார்டு (தி.மு.க.,) கவுன்சிலர் கல்பனா. தனது உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக, மேயர் பதவியை சமீபத்தில் ராஜினாமா கடிதத்தை, கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக, மாநகராட்சியில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் நகல், மாநகராட்சியில் இருந்து கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தில் இருந்து கோவை மாநகராட்சி மேயர் பதவி, 8ம் தேதி (திங்கட்கிழமை) முதல் காலியாக இருப்பதாக, (பெண்களுக்கான ஒதுக்கீடு) மாநகராட்சி கமிஷனர் தெரிவித்திருக்கிறார். தீர்மான எண்: 111 என குறிப்பிட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலருக்கு, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று அறிக்கை அனுப்பினார்.

மேயராக பதவி வகித்த போது, கல்பனா பயன்பாட்டுக்காக, 'இன்னோவா கிரிஸ்டா' கார் மற்றும் 'பொலிரோ' ஜீப் வழங்கப்பட்டன. அவ்விரு வாகனங்களும் திரும்ப பெறப்பட்டு, மாநகராட்சி கமிஷனர் முகாம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தும், 'வாக்கி டாக்கி' ஒன்று, மேயர் வசம் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த 'வாக்கி டாக்கி'யும் திரும்ப பெறப்பட்டது.

மேயர் குடும்பத்துடன் வசிப்பதற்காக, ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி பங்களா இருக்கிறது. பங்களாவை காலி செய்வதற்கு, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us